அடுத்த ஆட்டம் வரும் ஞாயிறு
எதிரணி : BELIVERS CC
இதுவரை :9 வெற்றி :5 தோல்வி :4
மைதானம் : சிவானந்த மில்ஸ்
OUR SECRET OF SUCCESS " NO GIVE UP "

Monday, March 15, 2010

HARD HITTERS ஒரு அறிமுகம்

டீம் உருவாக காரணம்
2009 பிப்ரவரி ஒரு நாள்
ஒரு மழை நாள் இரவில் வழக்கம் போல உதயாவில் //உதயா அப்படின்னா bakery .வழக்கமாவே யூத் எல்லாம் குட்டி சுவத்துல உக்காந்து இருப்பாங்கன்னு கேள்வி பட்டு இருப்பீங்க.எங்களுக்கு அந்த மாதிரி இந்த இடம்.// சின்கிள் டீக்கு காசு இல்லாம எவன மண்டைய கழுவலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப திடீர்னு ஒரு விளம்பரம் எங்க கவனத்த ஈர்த்தது. பவிளம் UTV இணைந்து நடத்தும் 10 / 10 கிரிக்கெட் போட்டி. முதல் பரிசு 1,00,000 இரண்டாம் பரிசு 50,000 . மூன்றாம் பரிசு 10,000 . நாங்க எப்பவுமே பேராசை படமாட்டோம்.அதனால எப்படியாவது அந்த மூன்றாம் பரிச வாங்கனும்ன்னு முடிவு பண்ணி எங்க விண்ணப்பம் தர்ராங்கன்னு விசாரிச்சு அந்த இடத்திற்கு குடையோட போய் எங்க டீம் க்கு ஒரு டிக்கெட் கொடுங்கன்னு கேட்டா 1000 கொடுங்கன்னு கேட்டாங்க.அப்பவே அந்த மூன்றாம் பரிசு வேணாம்.வேற எதாவது டீம்கு விட்டு கொடுத்துடலாம்னு டீ மாஸ்டர் சொன்னாரு.வயசுக்கு மரியாதையை கொடுக்காம ஆள்க்கு 100 ரூபாய் போட்டு அந்த டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டோம்.மீதி காசுக்கு கிரிக்கெட் பேட் வாங்கிட்டோம்.அப்புறம் ஏரியாக்கு வந்து அந்த டிக்கெட்ல என்ன எழுதிஇருக்குனு படிச்ச அடுத்ததா ஒரு வெடிகுண்டு. Players should be wear the uniforms while playing the match will be compelsary.அதுக்கு தான் சிவா கேட்டான் அண்ணா எங்க அம்மா என்னோட uniform எல்லாம் பாத்திரம் விற்கிறவன்கிட்ட போட்டாங்க.அப்ப என்னை விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்கலானு கேட்டு வேற கடி பண்ணிட்டான்.

அப்புறம் அதுக்கு கோவைல இருக்குற சந்து போந்து எல்லாம் அலைஞ்சு ஜெர்சி எங்க சீப்பா கிடைக்கும்னு விசாரிச்சு அங்க போய் ஆர்டர் கொடுத்துட்டோம்.உங்களுக்கும் அந்த கடையோட முகவரி வேணும்ன்னா எங்களுக்கு மெயில் பண்ணுங்க.சரி அப்புறம் ஜெர்சில எழுதுறதுக்கு டீம் பேரு வேணும்ல.மேட்ச் விளையாடுறதுக்கு கேப்டன் வேணும்ல.இந்த மாதிரி நெறைய வேனும்க்ரதுனால டீம் மீட்டிங் போட்டோம்.

டீம் [Hard Hitters] பெயர் காரணம்

இந்த மாதிரி எல்லாம் சின்ன சின்ன வேலை எல்லாம் முடிக்குறதுக்குள்ள பிப்ரவரி அவுட் ஆகி மார்ச் வந்துருச்சு.போட்டிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செஞ்சா தான நம்மளையும் விளையாட விடுவாங்க.அத எடுத்து படிச்சு பார்த்த முதல் கேள்வியே எங்கள எல்லாம் ரொம்ப யோசிக்க வைச்சுடுச்சு.பெருசா ஒன்னும் இல்ல.உங்க டீம் பேரு என்ன? அட ஆமாம் நம்ம இன்னும் பெயரே வைக்கலைன்னு ஒரு மூணு பெயரை சீட்டுல எழுதி போட்டு செலக்ட் பண்ணினோம்.ROCKING STAR தான் வந்தது.//என்ன டா Hard Hitters அப்டின்னு பேர வைச்சுக்கிட்டு வேற என்னமோன்னு சொல்றேன்னு நினைக்காதீங்க.அங்க தான் ஒரு விறுவிறுப்பான திருப்பம்.தொடர்ந்து படிங்க//.எல்லோரும் முழு மனதா அந்த பேரையே ஜெர்சில அடிக்க கொடுத்தோம்.அப்புறம் அப்படியே நாங்களும் எல்லா வாரக்கடைசிலையும் பக்கத்துக்கு ஏரியா கூட மேட்ச் கேட்டு பயிற்சி[[தோத்துட்டு]] எடுத்துட்டு இருந்தோம்.

மார்ச்ம் அவுட் ஆகி ஏப்ரல் வந்துருச்சு.மேட்ச் தேதி கொடுத்துட்டாங்க.ஏப்ரல் முதல் வாரம்.ஆனா இன்னும் ஜெர்சி வாங்கல.மாட்சுக்கு 2 நாளுக்கு முன்னாடி காசு ரெடி பண்ணி வாங்க போனா தம்பி உங்க நேம் போர்டு எல்லாம் மழைல நனைஞ்சுவிட்டது.இன்னும் 2 நாள் ஆகும்னு ஒரு பாலை தூக்கி போட்டுட்டாரு.அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப தான் ஏற்கனவே வேற ஏதோ டீம்க்கு ரெடி பண்ணி வச்சு இருந்த HARD HITTERS போர்டு இருந்தது.அப்புறம் அதையே பேர வச்சு ஜெர்சி அடிச்சுட்டோம்.[[என்ன டா பிளாஷ்பாக் ரொம்ப மொக்கையா இருக்குனு நினைக்கறது தெரியறது]] அடுத்த நாள் ஜெர்சி வாங்கி அதுக்கு அடுத்த நாள் மேட்ச் ஆடி கேவலமா தோத்தும்கறது வேற விசயம்.ஆனா இப்ப 2010 . முழுசா ஒரு வருஷம் ஆச்சு .நாங்க டென்னிஸ் பால்ல இருந்து கார்க் பாலுக்கு மாறி மாறினதொட இல்லாம ஜெயிக்க வேற ஆரம்பிச்சுட்டோம்.படிக்குற உங்களுக்கு எங்கள பத்தி எல்லாம் தெரியனும்ல அதான் கொஞ்சம் பெரிய அறிமுகம்.இனிமேல் எங்க ஒவ்வொரு மாட்ச்சும் அப்டேட் பண்ண போறோம்.பிடிச்சு இருந்தா படிங்க.பிடிக்காம இருந்தாலும் படிங்க.வேற வழி இல்ல.