அடுத்த ஆட்டம் வரும் ஞாயிறு
எதிரணி : BELIVERS CC
இதுவரை :9 வெற்றி :5 தோல்வி :4
மைதானம் : சிவானந்த மில்ஸ்
OUR SECRET OF SUCCESS " NO GIVE UP "

Tuesday, March 15, 2011

தொடர்ந்து மூன்றாவது வெற்றி !!!!

விளான்குரிச்சி மார்ச் - 13 - 2011 : காலை 10 .00 am க்கு ஆட்டம் தொடங்கியது. இன்று மிகவும் சுறுசுறுப்பாக அணி வீரர்கள் இருந்தார்கள்.
பிட்ச் ரிப்போர்ட்: மிகவும் மோசமான பிட்ச், பிட்ச் நிறைய சிறு கற்களாகவே காட்சி அளித்தது. இருந்தபோதும் அணி வீரர்கள் மனம் தளரவில்லை.

டாஸ் எப்பவும் போல் எதிர் அணியே வென்றது. அவர்கள் மட்டை வீச தேர்வு செய்தனர்.

முதல் ஸ்பெல் கிரி மற்றும் சதிஸ் வீசினார்கள், நான்கு ஓவர் முடிவில் 1 விக்கெட் எடுத்து இருந்தோம், அடுத்து தினகர், தியாகு மற்றும் சுபாஷ் வீசினார்கள் 16.1 ஓவர் இல் எதிர் அணி அணைத்து விக்கெட் களும் இழந்து 73 ரன் களுக்கு ஆட்டம் இழந்தனர்.

சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் வேண்டுமானால் ஆசிஷ் நெஹ்ரா சொதப்பி இருக்கலாம்., ஆனால் எங்கள் ஆஷிஷ் நெஹ்ரா [தினகரன்] ஒரு நாளும் சொதப்பியதில்லை.இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி ஒரு மைடேன் மற்றும் எட்டு ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்

நமது அணி வீரர்கள் மிகவும் களைப்புடன் இருந்ததால் அனைவரும் மோர் குடிக்க சென்று சிறிது மணித்துளிகளில் களம் இறங்கினர்.எப்போதும் போல் நமது கரும் சிறுத்தையும் (ஜுடு ஆரோக்கியராஜ்) முரட்டு சிங்கமும் (சரவணகுமார் ) களம் இறங்கினர். முரட்டு சிங்கமும் கரும் சிறுத்தையும் நன்கு மட்டை வீசினார்கள்.கரும் சிறுத்தை 10 என்ற இரட்டை இல்லாக ரன் உடன் கேட்ச் என்ற முறையில் ஆட்டம் இழந்தார்.

அவரை தொடர்ந்து ஜம்போ ஷார்ட் பப்லு (எ) சிவா களம் இறங்கினர் அவரை கண்டு எதிர் அணியீன் பந்து வீச்சாளர்கள் மதம் கொண்ட -- பார்த்து மிரளுவது போல் மிரண்டனர் அதை போலவே அவர் தம் பணியை செம்மையாக செய்தார் ஜம்போ சிக்ஸ் அடித்து அனைவர் மனதிலும் சிக்ஸர் நின்றது. அடுத்த இரண்டு பந்தில் போல்ட் என்ற முறைகள் ஆட்டம் இழந்தார் அவர் தம் கணக்கை 10 என்று முடித்து கொண்டார்.

இறுதில் 6 ஓவர் மீதம் இருக்கும் நிலையல் அணியீன் நச்சத்திர வீரர் புயல் வேக பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரௌன்டேர் சுபாஷ் களம் இறங்க பந்து வீச்சாளர் பந்து வீச பயந்து வீச எங்கள் நட்சத்திர வீரரும் பயந்து மட்டையை வீச பந்து தானாக முன்வந்து மட்டையில் பட்டு பின்புறம் கேட்ச் ஆகா சென்றது அதை எதிர் அணி எதிர் பார்க்காததால் அந்த பந்தை கோட்டை விட்டனர் அதனால் சிங்கள் எடுத்து மறுபடியும் அடுத்த ஓவரும் பிடிக்க நேர்ந்தது பிறகு பந்து வீச்சாளர் வீசிய பந்தை ஆப் சைடு இல் அடித்து எங்கள் நட்சத்திர வீரர் வெற்றியை எங்கள் வசம் ஆக்கினர்.

முதலில் மட்டை பிடிக்க சென்ற சிங்கத்தை பற்றி எழுதலன்னு யோசிக்கிறீங்களா, அவரின் மட்டை வீசும் திறமையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லாததால் நூலகதிர்க்கு சென்று இருந்தேன். அவர் தம் அபார ஆட்டத்தால் எங்கள் அணியை வெற்றி அடைய செய்தார். அவர் 40 பந்து களுக்கு 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். எங்கள் முரட்டு சிங்கம் மட்டை வீசியதை கண்டு எதிர் அணியினர் மிரண்டு போனார்கள். அவர் சிக்ஸ் மற்றும் நான்காக விளாசினார். இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 11.2 ஓவர்கலீல் வெற்றி கனியை பறித்தோம்.

இந்த வெற்றியின் மூலம் நாங்கள் தொடர்து மூன்று வெற்றி அடைந்து உள்ளோம். எங்கள் அணியீன் தலைவர் தொடர்ந்து ஐந்து வெற்றி பெற்றால் முத்து ராவுத்தர் ஹோட்டல் க்கு அழைத்து சென்று யானை பசிக்கு சோழ பொறி அல்ல கரும்பு காடு போன்று தீனி போடுறேன் என்று உறுதி அளித்து உள்ளார் என்று சொல்லிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்.

அணியீன் நலனுக்காக இல்லை என்றாலும் எங்கள் நலனுக்காக இன்னும் இரண்டு வெற்றியை அணிக்கு உரித்தாக உள்ளோம் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது எங்கள் முரட்டு சிங்கம். அவர் 40 பந்திற்கு 32 ரன்கள் மற்றும் 2 கேட்ச் பிடித்தார்

எளிதாக கிடைத்த வெற்றி

பிப் 27 ஞா:

சென்ற வாரம் வென்ற உற்சாகத்தில் நம்ம பசங்க, இந்த வாரமும் ஜெயிச்சுடாங்க..!
Beleivers கூட நடந்த மாட்ச்ல டாஸ் தோத்துட்டோம், முதலில் களமிறங்கிய எதிரணி, நிணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனாங்க.
போலிங்ல அதிகபட்சமா கிரி 3 , மோகன் 2 , மத்த எல்லா பௌலேர்ஸ்ம் விக்கெட் எடுத்தாங்க.

அடுத்து களமிறங்கிய நம் அணியினர் 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தோம்.ஆறு விக்கெட் வித்தியாசத்தில், வெற்றி அடைந்தோம்.

பாட்டிங்கில் அதிகபட்சமாக தியாகு [கேப்டன்] - 24 ரன்கள், சரவணன் - 21 ரன்கள்.

ஆட்ட நாயகன் - கேப்டன் தியாகு

தொடர்ந்து இரண்டாவது வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பினோம்..!

Tuesday, February 22, 2011

பௌளேர்களின் எழுச்சியால் வெற்றி

பிப் 20 ஞா: கடந்த எட்டு ஆட்டங்களுக்கு பிறகு வெற்றியை ருசித்தோம்.

டாஸ் வென்ற எங்கள் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 98 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தோம். மேல் வரிசை மட்டை வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையிலும் தனி ஒருவராக போராடி, கடைசி வரை களத்தில் நின்று சிவகுமார் அடித்த 25 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது எங்கள் வெற்றிக்கு உதவியது.


பாட்டிங்கில் அசத்திய சிவகுமார்
அடுத்து இறங்கிய எதிரணி வீரர்கள் முதல் 10 ஓவர்களுக்கு எடுத்த ரன்கள் 58 நான்கு விக்கெட் இழப்பிற்கு.புதிய பௌலர் சதீஷ் குமார் இதில் இரண்டு விக்கெட்டுகளை கைபற்றினார்.
இதில் அடுத்த 42 பந்துகளுக்கு 40 ரன்கள் என்ற நிலையில், நமது கேப்டன், மற்றும் கிரி அவர்களின் பந்து வீச்சில் அனல் தெறித்தது.அடுத்த நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட் கைப்பற்றினாலும், ரன்களும் குறைந்து கொண்டே வந்தது. இறுதியாக மூன்று ஓவர்களுக்கு 18 ரன்கள் என்ற நிலையில், கேப்டன் வீசிய அந்த ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் தான் போனது.அடுத்து கிரி வீசிய ஓவர் மெய்டேன்.மிக சிறப்பான அந்த ஓவரில் ஒரு பந்து கூட எதிரணி வீரரின் பாட்டில் படவில்லை. இறுதி ஓவரின் முடிவில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற நிலையில் கேப்டன் ஒரே ஒரு ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றி பெற்றோம்.

பெளலிங்கில் அசத்திய கிரி தியாகு [கேப்டன்] சதீஸ்

Sunday, February 6, 2011

ஒரே நாளில் மிகுந்த சந்தோசம் மற்றும் மிகுந்த துயரம் !!!!

நேற்று என்றும் போல் மட்டை வீச சென்றோம் ஆனால் நேற்று மட்டைகள் புதிதாக வாங்கி புதிய பலத்துடன் சென்றோம் !அதன் விளைவு எதிர்பார்க்காத அளவிற்கு எங்கள் அணி மிக அற்புதமாக மட்டை வீசினார்கள் அணி மிக அற்புத இலக்கை எட்டினோம். 146 ரன்களை வெறும் நூறு பந்துகளுக்கு வீசினோம். புதிய மட்டை என்பதாலோ என்னமோ எங்கள் அணி மட்டை வீசுபவர்கள் மிக அற்புதமாக விளாசினார்கள். மிகுந்த மகிழ்ச்சியில் எங்கள் அணி இருந்தது. நேற்றைய ஆட்டம் முழுவதும் நான்கும் ஆறுமாக சென்றது. இவை அனைத்துக்கும் முக்கிய நன்றி கூறி கொள்கிறோம்.எங்கள் அணியின் சார்பாக எங்கள் அணியின் சிறந்த ஆட்டக்காரர்கள் Mr . சரவணகுமார் மற்றும் ஜுடு. இவர்கள் அவர்களுடைய திறமை அனைத்தையும் போதும் போதும் என்ற அளவிற்கு வெளிகாட்டினர்கள். இவை அனைத்தும் ஒரு மணித்துளிகளில் களைந்துவிடும் என்று எங்கள் அணியினர் என்னவில்லை. எங்கள் மட்டை வீச்சு திறமையை நேற்று நாங்களே நன்று அறிந்துகொண்டோம். அதேபோல் பந்து வீச்சாளரின் திறமையும் எங்களுக்கு தெரிந்தது.

அடுத்து பந்து வீச்சை பற்றி பேசுவோம், எங்களால் மட்டை மற்றும் பந்து கடையில் எளிதாக வாங்க முடிந்தது இந்த பாலாய் போன பந்துவீச்சாளரை வாங்கவே முடியவில்லை எந்த கடையில் கேட்டும் கிடைக்கவில்லை. ஆகையால் நேற்றைய ஆட்டத்தை நங்கள் இழந்தோம் இது எங்கள் தவறு இல்லை கடைக்காரர் தவறு. அவர் வாடிக்கையாளரை திருப்தி படுத்த தவறிவிட்டார். ஆகையால் நங்கள் எங்கள் அணியீன் leegal advicer உடன் ஆலோசனை பெற்று அணைத்து ஸ்போர்ட்ஸ் ஷாப் காரர்கள் சங்கம் அல்லது கடைகள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை "எதிர் அணி" மன்னிக்கவும் "எதிரி அணியினர்" நான்கும் ஆறுமாக விளாசி வெற்றி அடைத்தனர். உண்மையாக எங்கள் பாராட்டுக்கு உரியவர்கள் தன் அவர்கள். இருந்தபோதிலும் அவர்கள் மட்டையாலும் பந்தினாலும் மட்டும் விளையாடாமல் வாய்ஜாலமாகவும் நிறைய விளையாடினார்கள். எது எப்படியோ நேற்றைய ஆடம் எங்களுடையது அவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்தோம். நேற்றைய ஆட்டத்தின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டது நாங்கள் மட்டை பந்து விளையாட தகுதி அற்றவர்கள் என்பது மட்டும்தான். இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் எண்ணங்களை மாற்ற மாட்டோம் நாங்கள் முயற்சியை விடாமல் வெற்றி அடைய பாடுபடுவோம். "முயற்சி திருவினை ஆக்கும்" என்பதை நாங்கள் நன்று அறிவோம். ஆகையால் இனிமேலாவது நாங்கள் நல்ல ஐந்து பந்து வீச்சாளர் உடன் களம் இறங்குவோம் என்று உறுதிமொழி எடுத்துகொள்கிறோம்.

எடுத்துகாட்டு: குரங்கு மரத்தில் இருந்து விழுந்தால் கீழே உள்ள குச்சியை எடுத்துக்கொண்டு எழுந்திரிக்கும் ஏனென்றால் அது விழுந்தால் அதன் கூட்டத்தினர் அதன் அணியில் சேர்த்து கொள்ளாதது என்பதற்காக. எங்களுக்கு அதுபோன்ற ஒரு காரணம் கூட நேற்றைய ஆட்டத்தில் கிடைக்கவில்லை.

பின் குறிப்பு: நாங்கள் எங்கள் அணியில் அதுபோன்று செய்ய மாட்டோம் ஏனென்றால் நாங்கள் மனித இனம் அது மிருகம் அதற்கு ஐந்து அறிவு எங்களுக்கு ஆறு ஆறு ஆறு !!!!!!!!!!!

இந்த ஆட்டம் தோல்வியில் முடிய கரணம் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லாத காரணத்தால் நாங்கள் உண்மை காரணங்களை பதிவு செய்கிறோம். தவறுதலுக்கு வருந்தவும் அணி வீரர்களும் மற்றும் எங்களை மதித்து எங்கள் blog படிப்பவர்களும்


* இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக பதியபடவில்லை அப்படி ஏதேனும் புண்படுத்தி இருந்தால் மனிக்கவும். இந்தபதிவு நாம் இனிவரும் நாளில் இதுபோன்ற தவறுகளை மறுபடியும் செய்யவேண்டாம் என்பதற்காக.

Sunday, October 10, 2010

மீண்டும் வெற்றி பாதையில்



மழை,மற்றும் சில சின்ன பிரச்சனைக்காக ஒரு மாதமாக விளையாட போகாம, நேத்து போய் விளையாண்டோம்.நல்ல டீம்-ஸ்ப்ரிட்டோட விளையாண்டோம். நாங்க அவுட் ஆப் பார்ம்ல இருந்தப்ப தொடர்ந்து இரண்டு வாரம் எங்களை கேவலமா தோற்கடிச்ச, மேட்ச் முடிஞ்ச உடனே எங்களுக்கு கை கொடுத்த, எங்களை கடுப்பு பண்ணின BELEIVERS டீம் கூட மேட்ச். 17 ஓவர் மேட்ச். வழக்கம் போல டாஸ் தோத்துட்டோம். அவங்களும் வழக்கம் போல டாஸ் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்க, பாட்டிங் தான் எடுத்தாங்க.

ஆரம்பம் முதலே பௌலிங்ல அசத்திய நம்ம பயபுள்ளைக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்த வண்ணம் இருந்தாங்க.அதிலும் குறிப்பா எல்லாரும் நல்லா பீல்டிங் பண்ணினாங்க.மொத்தம் ஐந்து கேட்ச் பிடிச்சாங்க. அதிலயும் ஜூடு,சதீஷ் இரண்டு பேரும் கஷ்டமான கேட்ச்சை மிக லாவகமாக பிடித்தார்கள்.ஆக மொத்தம் 86 ரன்க்கு ஆல்-அவுட். பௌலிங் போட்ட ஐந்து பேரும் தலா இரண்டு விக்கெட் எடுத்தாங்க.

416911_33_preview.jpg?ITEM_ENT_ID=

ஓவருக்கு 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நம்ம பசங்க அட்டகாசமா விளையாண்டு மூன்று ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றனர்.

ஸ்கோர் கார்டு

ஜூடு 23 ரன்கள்
சதீஷ் 15 ரன்கள்
தினகரன் 12 ரன்கள் 7 பந்துகளில்

இந்த வார அறிமுகம் :அதிரடி ஆட்டக்காரர் தினகரன்

தினகரன் 12 ரன்கள் 7 பந்துகளில்.அதுக்கு மேல அடிக்கிறதுக்கு ரன்ஸ் இல்ல. போய் இறங்குனதுல இருந்து செம அடி. WELCOME TO OUR TEAM.

இந்த வார நாயகன் : ஜூடு பாட்டிங் 23 ரன்கள் பௌலிங் 2 விக்கெட்


அடுத்த வாரம் ஒரு CORK BALL - TOURENMENT.64 டீம் விளையாடுறாங்க. நம்ம ஆளுகளும் விளையாட போறாங்க. பொறுத்து இருந்து பாப்போம். என்ன நடக்குதுன்னு.

ALL THE BEST GUYS

Sunday, August 22, 2010

மழை மழை



ஆகஸ்ட் 15 , 22 ஞாயிறு : கடந்த இரண்டு வாரங்களாக கடும் மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது.



எங்களோட மைதானத்தின் நிலைமை சேரும் சகதியுமாக மாறியது.

Monday, August 2, 2010

கிலி கொடுத்த கில்லி அணியினர்

ஆகஸ்ட் 01 ஞாயிறு : அட கில்லி பாய்ஸ் கூடயும் தோத்துட்டோம்.
முதலில் பேட் செய்த கில்லி அணியினர் 100 பந்துகளுக்கு 123 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகினர். கிரி மொத்தம் முன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். மூன்றுமே போல்ட்.இந்த வாரம் அவன் பந்து வீச்சில் அனல் தெறித்தது.

_42424712_cricket_416.jpg
கிரி வீசிய பந்து இதை போன்றதொரு அருமையான போல்ட்

வழக்கம் போல நாங்க பேட் செய்து 98 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது.ஒரு 100 ரூபாய் போச்சு.