டாஸ் வென்ற எங்கள் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 98 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தோம். மேல் வரிசை மட்டை வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையிலும் தனி ஒருவராக போராடி, கடைசி வரை களத்தில் நின்று சிவகுமார் அடித்த 25 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது எங்கள் வெற்றிக்கு உதவியது.
பாட்டிங்கில் அசத்திய சிவகுமார்
அடுத்து இறங்கிய எதிரணி வீரர்கள் முதல் 10 ஓவர்களுக்கு எடுத்த ரன்கள் 58 நான்கு விக்கெட் இழப்பிற்கு.புதிய பௌலர் சதீஷ் குமார் இதில் இரண்டு விக்கெட்டுகளை கைபற்றினார்.இதில் அடுத்த 42 பந்துகளுக்கு 40 ரன்கள் என்ற நிலையில், நமது கேப்டன், மற்றும் கிரி அவர்களின் பந்து வீச்சில் அனல் தெறித்தது.அடுத்த நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட் கைப்பற்றினாலும், ரன்களும் குறைந்து கொண்டே வந்தது. இறுதியாக மூன்று ஓவர்களுக்கு 18 ரன்கள் என்ற நிலையில், கேப்டன் வீசிய அந்த ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் தான் போனது.அடுத்து கிரி வீசிய ஓவர் மெய்டேன்.மிக சிறப்பான அந்த ஓவரில் ஒரு பந்து கூட எதிரணி வீரரின் பாட்டில் படவில்லை. இறுதி ஓவரின் முடிவில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற நிலையில் கேப்டன் ஒரே ஒரு ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றி பெற்றோம்.
பெளலிங்கில் அசத்திய கிரி தியாகு [கேப்டன்] சதீஸ்
No comments:
Post a Comment