அடுத்த ஆட்டம் வரும் ஞாயிறு
எதிரணி : BELIVERS CC
இதுவரை :9 வெற்றி :5 தோல்வி :4
மைதானம் : சிவானந்த மில்ஸ்
OUR SECRET OF SUCCESS " NO GIVE UP "

Monday, April 26, 2010

வெட்டி வீசினோம் விளையாட்டு பசங்களை [PLAY BOYS]

ஏப் 25 ஞாயிறு: எந்த நினைப்பும் இல்லாம போய் விளையாண்டோம். வெற்றியோ தோல்வியோ அதை பத்தி பயப்படாம விளையாடுவோம்.எல்லாரும் அவங்க அவங்க திறமைய காட்டுவோம்.100 பால்ஸ் மேட்ச் பிளஸ் 100 ரூபாய் பந்தயம்.வழக்கம் போல டாஸ் தோத்துட்டோம்.இன்டர்நேஷனல் மாட்ச்ல தான் டாஸ் ஜெயிச்சா சேஸ் பன்ன்றோம்ன்னு சொல்றானுக. இங்க டாஸ் ஜெயிச்சா உடனே பாட்டிங்ன்னு சொல்லி அலையுரானுங்க.

வழக்கம் போல பௌலேர்ஸ் நல்ல ஸ்டார்ட் எடுத்து கொடுத்தாங்க.முதல் நாலு ஓவருக்கு வெறும் 12 ரன் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்துடாங்க.அப்புறம் அப்படியே நல்ல படியா எல்லாரும் விளையாண்டு அவங்கள 100 பாலுக்கு 61 ரன்க்கு கட்டுபடுத்திட்டோம். எல்லாருமே பீல்டிங் நல்ல பண்ணினோம்.சிவா,பரணி,கேப்டன் சிவா மட்டும் கொஞ்சம் சொதப்பிடானுக.அடுத்த மாட்ச்ல கரெக்ட் பண்ணிகோங்க.கீப்பர் சரவணன் இரண்டு ஸ்டம்பிங் பண்ணினாரு.சுபாஷ்,சிராஜ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

பெளலிங்கில் அசத்திய சிராஜ் மற்றும் சுபாஷ்

வழக்கத்திற்கு மாறாக சரவணன் முதல்ல பாட்டிங் பண்ணாம கேப்டன் சிவாஉடன் கிரி களமிறங்கினார்.முதலில் இறங்கிய இருவருமே சோபிக்கவில்லை.முதல் 5 ஓவருக்கு 21 ரன்க்கு 3 விக்கெட் எடுத்து தடுமாறியது.அடுத்து களமிறங்கிய சிவா மற்றும் சரவணன் 5 ஓவர்களில் 40 ரன்கள் அதிரடியாக சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சிவா 24 ரன்களுடனும், சரவணன் 11 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர்.10 ஓவர்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


வெற்றிக்கு பின் சிவா மற்றும் சரவணன் மகிழ்ச்சியை பகிர்ந்த காட்சி

MATCH SUMMARY
BATTING
SIVANESAN 24* SARAV N 11*

BOWLING
SUBASH 4-0-11-2 SIRAJ 3-0-11-2

Man of the Match : Sivanesan [For his Unbeaten 24 runs]

மே தினத்தை முன்னிட்டு நாங்கள் இன்ப சுற்றுலா செல்ல இருப்பதால் அடுத்த வாரம் மாட்ச்க்கு நாங்க லீவ். அதனால அடுத்த வாரம் விட்டு அதுக்கடுத்த வாரம் பாப்போம்.


Monday, April 19, 2010

நாறடித்து விட்டார்கள் நாஸ்தி கய்ஸ்

ஏப் 18 ஞாயிறு: போன வாரம் ஜெயட்சுடோம் அப்படிங்கற தெனவெட்லா விளையாண்டோம்.கிழிச்சு அனுப்பிட்டாங்க.100 பால்ஸ் மேட்ச் பிளஸ் 100 ரூபாய் பந்தயம்.வழக்கம் போல டாஸ் தோத்துட்டோம். முதல்ல நல்ல தான் ஆரம்பிச்சோம்.

முதல் ஏழு ஓவருக்கு வெறும் 17 ரன்களுக்கு ஒரு விக்கெட்.அவ்ளோ தான் அடிச்சாங்க.அப்புறம் என்ன நினைசாங்கல்லோ நம்ம பய புள்ளைக அடுத்த 58 பாலுக்கு 85 ரன்கள் வள்ளல் போல் வாரி வழங்கி விட்டார்கள்.ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் ராஜ்குமார் என்ற 16 வயது பொடியன் மூணு ஓவருக்கு வெறும் 11 ரன் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்தான்.கடைசியா 100 பாலுக்கு 102 ரன் எங்களுக்கு அவங்க வச்ச டார்கெட்.

எங்க bating ஒன்னும் சொல்லிகிற மாதிரி இல்ல.இரண்டு பேர் மட்டும் தான் பத்து ரன் [Siraj,Sarav N] அடிச்சோம். கடைசியா 58 ரன் அடிச்சோம் 9 விக்கெட் இழப்பிற்கு. 100 ரூபாயும் போச்சு, எங்க சபதமும் போச்சு. இனி திரும்பவும் முதல்ல இருந்து 5 மேட்ச் ஜெய்க்கனும். பாப்போம்.

Tuesday, April 13, 2010

சொல்லி அடித்து விட்டோம் கில்லி அணியை



ஏப் 11 ஞாயிறு: ஏற்கனவே இரண்டு வாரங்கள் தோல்வி, மற்றும் அணித்தலைவரின் சவால் ஆகியவற்றை மனதில் கொண்டு களமிறங்கிய HARD HITTERS அணி டாஸில் வழக்கம் போல தோற்றது. டாஸ் வென்ற கில்லி அணியினர் பேட்டிங் தேர்வு செய்தது. 100 பந்துகள் ஆட்டம் என முடிவு செய்யப்பட்டது.

சுபாஷ் பந்துவீட்சில் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் எதிரணியின் தொடக்க ஆட்டக்காரரர் ஸ்டம்புகள் சிதற கிளீன் போல்டானார்.அடுத்து அணியின் இளம்பந்துவீச்சாளர் ராஜ்குமார் மீண்டும் ஒரு முறை ஸ்டம்புகள் சிதற வைத்தார்.தொடர்ந்து பந்து வீச்சாளர்கள் அசத்த கில்லி அணி 65 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. HARD HITTERS அணி சார்பில் அதிகபட்சமாக சுபாஷ்,தியாகு,மோகன்,கிரி தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

100 பந்துக்கு 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அடுத்த இன்னிங்க்ஸ்-ஐ ஆரம்பித்த HARD HITTERS அணியினர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். முதல் விக்கெட் ஜோடி நான்கு ஓவர்களில் 30 ரன்கள் சேர்த்தது.அணியின் எண்ணிக்கை 36 ஆக இருந்த போது அணியின் தலைவர் சிவா [14 ரன்கள்] விக்கெட் பறிபோனது.பின்பு வந்த சிராஜ் உடன் ஜோடி சேர்ந்த சரவணன்[21 ரன்கள்] அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.11.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

MATCH SUMMARY
BATTING
SARAV 21 ,SIVA KUMAR 14

BOWLING
SUBASH 2-0-5-2 , GIRI 1-0-5-2

Man of the Match : Siva Kumar [For his Best Captaincy]

சவாலின் முதல் வெற்றியை பறித்து விட்டோம். இன்னும் மீதமுள்ள நான்கு ஆட்டங்களிலும் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையை இந்த ஆட்டம் எங்களுக்கு விதைத்துள்ளது.அடுத்து மோதும் NASTY GUYS எங்களை ஏற்கனவே நாற அடித்து உள்ளனர்.கட்டாயமாக பழி தீர்ப்போம் என உறுதியாக உள்ளோம் .அடுத்த வாரம் சந்திப்போம் இதை போன்றதொரு பிரம்மாண்ட வெற்றியுடன்.....!

Wednesday, April 7, 2010

எடுத்த சபதம் முடிப்போம்

கடந்த இரண்டு வாரங்களாக படு தோல்வி.முன்னணி வீரர்கள் பார்ம் அவுட், மற்றும் வீரர்களின் காயம், இது போன்ற உப்பு சப்பிலாத காரணங்களை மனதில் கொண்டு தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி வருவதால் நல்ல நிலைக்கு திரும்பிய பின் எங்களது ஆட்டம் பற்றிய பதிவு போடலாம் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு ஆட்டங்களை கவனித்த எங்கள் அணி தலைவர் எங்களை வெற்றி பாதைக்கு திருப்ப இனி தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வென்றால் அணி வீரர்கள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் ,உற்சாக பானமும் தனது சொந்த செலவில் வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக இல்லாவிட்டாலும் அதற்காவே ஜெயப்போம் என வீரகள் உறுதி கொண்டுள்ளனர்.ரசிகர்களின் பிராத்தனைகள் வீண் போகதெனவும் விரைவில் காப்டனுக்கு செலவு வைப்போம் என நெஞ்சார்ந்த உறுதி கூறுகிறோம்.அடுத்த வாரம் சந்திப்போம் வெற்றியோடு .


Chak DE Hard Hitters