அடுத்த ஆட்டம் வரும் ஞாயிறு
எதிரணி : BELIVERS CC
இதுவரை :9 வெற்றி :5 தோல்வி :4
மைதானம் : சிவானந்த மில்ஸ்
OUR SECRET OF SUCCESS " NO GIVE UP "

Sunday, October 10, 2010

மீண்டும் வெற்றி பாதையில்



மழை,மற்றும் சில சின்ன பிரச்சனைக்காக ஒரு மாதமாக விளையாட போகாம, நேத்து போய் விளையாண்டோம்.நல்ல டீம்-ஸ்ப்ரிட்டோட விளையாண்டோம். நாங்க அவுட் ஆப் பார்ம்ல இருந்தப்ப தொடர்ந்து இரண்டு வாரம் எங்களை கேவலமா தோற்கடிச்ச, மேட்ச் முடிஞ்ச உடனே எங்களுக்கு கை கொடுத்த, எங்களை கடுப்பு பண்ணின BELEIVERS டீம் கூட மேட்ச். 17 ஓவர் மேட்ச். வழக்கம் போல டாஸ் தோத்துட்டோம். அவங்களும் வழக்கம் போல டாஸ் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்க, பாட்டிங் தான் எடுத்தாங்க.

ஆரம்பம் முதலே பௌலிங்ல அசத்திய நம்ம பயபுள்ளைக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்த வண்ணம் இருந்தாங்க.அதிலும் குறிப்பா எல்லாரும் நல்லா பீல்டிங் பண்ணினாங்க.மொத்தம் ஐந்து கேட்ச் பிடிச்சாங்க. அதிலயும் ஜூடு,சதீஷ் இரண்டு பேரும் கஷ்டமான கேட்ச்சை மிக லாவகமாக பிடித்தார்கள்.ஆக மொத்தம் 86 ரன்க்கு ஆல்-அவுட். பௌலிங் போட்ட ஐந்து பேரும் தலா இரண்டு விக்கெட் எடுத்தாங்க.

416911_33_preview.jpg?ITEM_ENT_ID=

ஓவருக்கு 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நம்ம பசங்க அட்டகாசமா விளையாண்டு மூன்று ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றனர்.

ஸ்கோர் கார்டு

ஜூடு 23 ரன்கள்
சதீஷ் 15 ரன்கள்
தினகரன் 12 ரன்கள் 7 பந்துகளில்

இந்த வார அறிமுகம் :அதிரடி ஆட்டக்காரர் தினகரன்

தினகரன் 12 ரன்கள் 7 பந்துகளில்.அதுக்கு மேல அடிக்கிறதுக்கு ரன்ஸ் இல்ல. போய் இறங்குனதுல இருந்து செம அடி. WELCOME TO OUR TEAM.

இந்த வார நாயகன் : ஜூடு பாட்டிங் 23 ரன்கள் பௌலிங் 2 விக்கெட்


அடுத்த வாரம் ஒரு CORK BALL - TOURENMENT.64 டீம் விளையாடுறாங்க. நம்ம ஆளுகளும் விளையாட போறாங்க. பொறுத்து இருந்து பாப்போம். என்ன நடக்குதுன்னு.

ALL THE BEST GUYS

Sunday, August 22, 2010

மழை மழை



ஆகஸ்ட் 15 , 22 ஞாயிறு : கடந்த இரண்டு வாரங்களாக கடும் மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது.



எங்களோட மைதானத்தின் நிலைமை சேரும் சகதியுமாக மாறியது.

Monday, August 2, 2010

கிலி கொடுத்த கில்லி அணியினர்

ஆகஸ்ட் 01 ஞாயிறு : அட கில்லி பாய்ஸ் கூடயும் தோத்துட்டோம்.
முதலில் பேட் செய்த கில்லி அணியினர் 100 பந்துகளுக்கு 123 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகினர். கிரி மொத்தம் முன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். மூன்றுமே போல்ட்.இந்த வாரம் அவன் பந்து வீச்சில் அனல் தெறித்தது.

_42424712_cricket_416.jpg
கிரி வீசிய பந்து இதை போன்றதொரு அருமையான போல்ட்

வழக்கம் போல நாங்க பேட் செய்து 98 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது.ஒரு 100 ரூபாய் போச்சு.

Tuesday, July 27, 2010

மின்னல் அடி

ஜூலை 25 ஞாயிறு : இந்த வாரம் எங்க டீம் வரலாற்றிலேயே முதல் முறையா 20 ஓவருக்கு 190 ரன் கொடுத்தோம். எல்லா பௌலேர்களும் நல்ல போடுறதுக்கே முயற்சி பண்ணினாலும், அத ரொம்ப ஈஸிஆ பௌண்டரிக்கு அடிச்சு, கொஞ்சம் கூட பாவம் பார்க்கமா 190 ரன் அடிச்சாங்க.நாங்க அடுத்த இன்னிங்க்ஸ் பத்தி சொல்லவே வேணாம். ஒரு 107 ரன் அடிச்சோம் 14 ஓவருக்கு. அடிச்சு சேஸ் பண்ணலாம் ன்னு ஆல்-அவுட் பண்ணிடாங்க.

இவங்க கூட இப்ப தான் முதல் முறையா ஆடுறோம்.எங்க டீம் மேனேஜர் ஒரு மிக சிறந்த அறிவாளி. இன்னும் நாலு வாரத்துல ஆஸ்திரேலியா கூட மேட்ச் ஆடினோம் ன்னு எழுதினாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்ல. யாரு என்னன்னு விசாரிக்காம மேட்ச் பிக்ஸ் பண்ணிறாங்க. உள்ள போய் விளையாடுறது யாரு.என்னா அடி அடிக்கிறாங்க.அதனால அடுத்த வாரம் எங்க அடிமை பசங்க கில்லி பாய்ஸ் கூட விளையாட போறோம். கண்டிப்பா அடுத்த வாரம் ஜெயிச்சுடுவோம்.

Tuesday, July 20, 2010

வெற்றிக்கான முதல் படியின் குறிப்பு



அதிகமான வேலை பளு காரணமாக எங்களின் விளையாட்டை தொடர்ந்து எழுத முடியாததிற்கு வருந்துகிறோம். கடந்த ஐந்து ஆட்டங்களை பற்றி ஒரு சின்ன குறிப்பு.

ஜூலை ஞாயிறு 12 ,19 , 26: வழக்கம் போல இந்த மூன்று வாரமும் தோத்துட்டோம்.

ஜூலை ஞாயிறு 3: இந்த வாரம் பௌலர்களோட எழுச்சியால் வின் பண்ணிட்டோம். பால் போடுறதுக்கே ஆள் இல்லாம பரிசோதனை முயற்சிக்காக ஜுடுக்கு பௌலிங் கொடுத்ததுக்கு மிக சிறப்பா பந்து வீசி மூன்று விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆக டீம்க்கு ஒரு புது ஆல்ரௌண்டர்.

அசத்தலான பந்து வீசிய ஜூடு
ஜூலை ஞாயிறு 10,17 : திருப்பவும் பழையபடி தோற்க ஆரம்பிச்சுடோம்.விளையாடரதுக்கே ஆள் இல்ல.பத்து பேர வச்சு விளையாண்டதுனால தான் இந்த தோல்வி.

என்னடா திடீர்ன்னு இப்டி தோத்தது எல்லாம் சேர்த்து எழுதுறாங்கன்னு நினச்சுடாதீங்க. because எதா இருந்தாலும் ஒரு நியாயம் வேணும்.நாங்களும் ஒரு நாள் சாதிச்சு காட்டுவோம்.

அறிவிப்பு : மோசமான பார்ம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக சிராஜ் , ராம்குமார் ஆகியோர் அணியில் இருந்து நீக்க படுகின்றனர். இதனால் தான் பத்து பேர வச்சு விளையாண்டோம்.

Wednesday, June 9, 2010

மழை

பலத்த மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது.



017.jpg


மழையிலும் காத்திருந்த ரசிகர்கள்

Rainy%20cricket.jpg

MAN OF THE MATCH : MR. VARUNA BHAGAVAAN

அடுத்த வாரம் மீட் பண்ணுவோம்..............!!!!!!

Tuesday, June 1, 2010

கூட்டுமுயற்சியும் வெற்றியும்

மே 30 ஞா: போன வாரம் ரொம்ப கேவலமா தோத்ததுல இந்த வாரம் ஒரு வெறிலஇரண்டு மேட்ச் விளையாடலாம் ன்னு முடிவு பண்ணினோம்.அதுல ஒன்னுTOURNAMENT . அப்புறம் ஒரு 250 பந்தய மேட்ச். அதனால இரண்டு போட்டியபத்தியும் தனித்தனியா பாப்போம்.

மேட்ச் ஒன்னு
இது ஒரு டென்னிஸ் பால் கிரிக்கெட் தொடர். நுழைவு கட்டணம் 500 . பொதுவாவே நாங்க டென்னிஸ் பால் எல்லாம் விளையாடுறது இல்ல. ஆனாஎல்லா ஏரியாலையும் ஒரு சின்னமணி [நாடோடிகள் படத்துல வர்ற கதாபாத்திரம்] இருப்பாங்களே, அதே மாதிரி எங்க ஊர்லயும் ஒருத்தர் இருக்காரு. அவரு தான் இந்த மாட்ச்ல சேர்த்தி விட்டாரு.அவரு காசு தான். மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி பிஸ்கட் எல்லாம் வாங்கி கொடுத்தாரு.

காலை 10 .30 மணிக்கு வெள்ளகினரில் WARRIORS உடனான முதல் மாட்சில் வழக்கம்போல டாஸ் வின் பண்ணி பீல்டிங் தேர்வு செய்தோம்.10 ஓவர் மேட்ச் தான். பௌலேர்ஸ் ஓட பழைய பார்ம் அப்படியே தொடர்ந்தது. கிரி, சுபாஷ் இவங்க 2 பேர தவிர மத்த எல்லா பால்லையும் செம அடி.ஆனாலும் இவங்கனாலையும் விக்கெட் எடுக்க முடியல. கடைசி பால்ல ஒரு ரன்க்கு ஆசைப்பட்டு ரன்-அவுட் ஆனாங்க. ஆக மொத்தம் அவங்க அடிச்சது 60 பாலுக்கு 130 ரன். டார்கெட் 131.

வழக்கம் போல இவனுக 50 ரன்க்கு ஆல்-அவுட் ஆகி இருப்பானுக அப்படின்னு நீங்க நினைச்சா ஏமாந்து போவீங்க. முதல் ஓவர் முதல் பால் சுபாஷ் அடிச்சான் சிக்ஸ். அப்புறம் அதே ஓவரின் 3 வது பால் சரவணன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட். அந்த ஓவர் முடிவில் 8 ரன் ஒரு விக்கெட். அப்படியே ஐந்து ஓவருக்கு 35 ரன்க்கு 3 விக்கெட். கேப்டனும்,சிவநேசனும் களத்தில் நின்று கொண்டிருந்த பொழுது எதிரணி வீரர், இதுக்கு மேல ஒன்னும் நொட்ட முடியாது ன்னு பச்சையா சொல்லிட்டான்.கேப்டனுக்கு வந்ததே கோபம். அடுத்த ஒரே ஓவர்ல மட்டும் 47 ரன். இன்டர்நேஷனல் கிரிக்கெட்ல கூட இப்படி ஒரு அடி அடித்து இருக்க மாட்டார்கள். அந்த ஓவரில் அடித்த ரன்கள் முறையே [Nb 6,6 ,NB 4,NB 6,wd,wd,wd,NB 4,NB 6,6,1].

இப்ப எங்க ஸ்கோர் 6 ஓவர் 82 ரன். இன்னும் 4 ஓவருக்கு 50 ரன் வேண்டும். ஏழாவது ஓவரில் 3 பால் கட்ட வச்சு நாலாவது பால் 1 ரன் அடிச்சான் சிவா.அந்த கடுப்பில கேப்டனும் போல்ட் ஆகி மாட்ச்ல ஒரு திருப்புமுனை. அப்படி இப்படின்னு அந்த ஓவர்ல வந்த ரன் வெறும் 4 . மூணு ஓவருக்கு 46 ரன் வேணும். அப்புறம் சிவநேசன் அந்த ஓவர்ல 3 சிக்ஸ் ஒரு சிங்கிள்ன்னு மொத்தம் 19 ரன்.இப்ப இரண்டு ஓவருக்கு 26 ரன்கள் தேவை. சிவா முதல் பால் ஒரு சிக்ஸ் அப்புறம் ஒரு two அடிச்சுட்டு அவுட்.அந்த ஓவர்ல 10 ரன் தான் வந்தது.கடைசி ஓவர் 16 ரன் வேணும். நாங்களும் எவ்ளவோ போராடியும் 7 ரன் தான் அடிக்க முடிஞ்சது.என்னா தான் மேட்ச் தோத்து இருந்தாலும் ஒரு கூட்டு முயற்சியா போராடினது எங்களுக்கு கொஞ்சம் சந்தோசமா தான் இருந்தது. கடைசியா நாங்க 10 ஓவருக்கு 121 ரன் அடிச்சோம்.

Match Summary

BOWLING

GIRI 2 - 0 - 9 - 0
SUBASH 2 - 0 - 12 - 0

BATTING

THIYAGU 39 FROM 13
SIVANESAN 33 FROM 25


மேட்ச் ரெண்டு (கார்க் பால்)
இரண்டாவது மேட்ச் கீரணத்தம் டெக்கான் சார்ஜார்ஸ் அணியினருடன் மதியம் 2 .15 மணிக்கு தொடங்கியது. வழக்கம் போல டாஸ் வின் பண்ணி வழக்கத்திற்கு மாறாக பாட்டிங் தேர்வு செய்தோம். 100 பால்ஸ் மேட்ச் பிளஸ் 250 rs பந்தயமாக முடிவு செய்யப்பட்டது. இந்த மாட்ச்லையும் முதல் ஓவர் மூனாவது பால்ல சிவகுமார் ஸ்லிப்ல கேட்ச் கொடுத்து அவுட் ஆகிட்டாரு. அப்புறம் அப்படியே எல்லாரும் பொறுமையாக ஆடி 98 ரன் அடிச்சோம் 5 விக்கெட் இழப்பிற்கு.அதிகபட்சமா சரவணன் 32 ,சுபாஷ் 22 ,தியாகு 18 ரன் அடிச்சாங்க.

இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பிச்ச டெக்கான்
சார்ஜார்ஸ் மந்தமாக விளையாடிய படியால், சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து கொண்டிருந்தார்கள்.பௌலேர்ஸ் எல்லாம் பழைய பார்ம்க்கு வந்ததும் ஒரு முக்கிய காரணம்[சிராஜ் தவிர].கடைசியா 4 பாலுக்கு 5 ரன் வேணும்.ஒரே ஒரு விக்கெட் தான் அவங்க கைல இருக்கு.மோகன் பால் போட்டான். முதல் இரண்டு பால் கட்டை. மூனாவது பால் தேவை இல்லாம லெக்சைடுல புல்-டாஸ். அத சரியா அடிச்சார் எதிரணி வீரர்.அதை எல்லை கோட்டருகே நின்று கொண்டிருந்த சிவகுமார் அபாரமாக தடுத்து வீசியதன் மூலம் வெறும் ஒரு ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது.ஒரு பால் நாலு ரன்.அந்த கடைசி பந்தில் இன்னொரு விக்கெட் போல்ட். மொத்தம் மோகன் 5 விக்கெட் கைபற்றினார். இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எங்கள் வசமாக்கினோம்.

MATCH SUMMARY

BATTING
SARAVANAN 32 FROM 42
SUBASH 22 FROM 16
BOWLING
MOHAN 3.4 - 0 - 25 - 5

MAN OF THE MATCH MOHAN

Tuesday, May 25, 2010

கம்பன் ஏமாந்தான்!

மே 23 :சென்ற வாரம் கார்க் பால் தொடருக்கு சென்று இருந்தோம். தொடரில் வெற்றி பெற்றால் 8000 ரூபாய் பரிசு தொகை!. ஆளுக்கு 50 ரூபாய் போட்டு போட்டியின் நுழைவு கட்டணம் 500 ரூபாய் செலுத்தினோம்.

விசேசம் என்ன வென்றால் நீண்ட நாளுக்கு பிறகு டாசில் வெற்றி பெற்றோம். அதை விட விசேசம் புதிதாக நாங்கள் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து சென்றோம். அதை போட்டு கொண்டு பேருந்து நிறுத்ததிற்கு வந்தவுடன் எமனுக்கு மிஸ்ட் கால்விட்டு விட்டு காத்திருந்த பெருசு எங்களை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றது. அதை தாங்கிக்கொண்டு ஆடுகளத்திற்கு சென்றோம்.

டாசில் வென்று முதலில் பாட்டிங் செய்ய முடிவு செய்தோம். வழக்கம்போல் சொதப்பலான ஆரம்பம். முட்டி மோதி ஒரு வழியாக பத்து ஓவரின் முடிவில் 59 ரன் எடுத்தோம். பின்னர் பேட் செய்த அந்த அணியினர் நாங்கள் வீசிய பந்துகளை எங்கள் தடுப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் செய்தனர். அனைத்தும் பௌண்டரிகளாக விளாசினார். இறுதில் 5.1 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 64 ரன்களை எடுத்தனர். தோற்று 500 ரூபாய் இழந்தோம்.

தோல்விக்கு அணி தலைவர் இரவு வரை மௌன அஞ்சலி செலுத்தினார். தோல்விக்கான காரணத்தை அணி தலைவர்(Thiyagu) கூறுகையில் ஆடுகளத்தின் தன்மையும் எனது வழக்கமான பௌலிங், மற்றும் துணை கேப்டனின்(Siva kumar) அபாரமான பாட்டிங்(18 பாலுக்கு 9 ரன்) தான் காரணம் என்று கூறினார். மற்றும் அணி வீரர்கள் சனி கிழமை இரவு பப்புக்கு சென்று லூட்டி அடித்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.

Match Summary:
Batting
Siva - 0 (1)
Giri - 0 (1)
Mohan - 1 (8)
Siva kumar - 9 (18)

Bowling
Mohan 1 over 7 run
Subash 1 over 6 run
Raj 1 Over 14 run
Thiyagu 1 over 21 run
Siraj 1 over 10 run
Giri 1 Ball 6 run

இந்த லட்சணத்தில் தான் விளையண்டோம்.

Wednesday, May 19, 2010

மே 16 ஞா : BELEIVERS உடனான மோதலில் ரொம்ப சப்புன்னு மாட்ச முடிஞ்சுருச்சு.அதனால நேரா மேட்ச் சம்மரி எழுதிடுறேன்.

HARD HITTERS WON THE TOSS ELECTED TO FIELD FIRST.
BELIEVERS BATTING
16.4 OVERS 77 FOR 5.

HARD HITTERS BOWLING
MOHANA SHANKAR 3 - 0 - 15 - 3
RAJ KUMAR 2 - 0 - 8 - 1

HARD HITTERS BATTING

SIVANESAN 13 BALLS 19 RUNS
RAJ KUMAR 18 BALLS 12 RUNS
JUDE 15 BALLS 14 RUNS

MAN OF THE MATCH : RAJ KUMAR.
HARD HITTERS WON BY 6 WICKETS.

இந்த வார நாயகன் நம்ம பொடியன் ராஜ்குமார்.16 வயசு தான் பய புள்ளைக்கு.என்ன பாட்டிங்,பௌலிங்.கலக்கிட்டான்.அப்புறம் அடுத்த வாரம் ஒரு கார்க் பால் தொடருக்கு போறோம்.ஜெயிச்சா 8000 ரூபாய் பரிசு. தொடர்ந்து 5 ஆட்டம் ஜெயிச்சா போதும்.அது போக கேப்டன் சோறு வாங்கி தருவாரு.ஆமா அந்த சவால் இன்னும் இருக்குதுல்ல.இன்னும் 3 மேட்ச் ஜெயிச்சா போதும்.எப்புடி பார்த்தாலும் எங்களுக்கு லாபம்.அடுத்த வாரம் மீட் பண்ணுவோம்.

Friday, May 14, 2010

HARD HITTERS IN REST



மே ஒன்றாம் தேதி கீப்பர் சரவணனின் பிறந்த நாளை முன்னிட்டு மாஹி சுற்றுலா.

மே ஒன்பதாம் தேதி : ஜுடே அவர்களின் மாமா பையனின் புதுநன்மை விழாவிற்காக பிரியாணி கிடைத்ததால் அங்கு சென்றோம்.

இரண்டு வாரமா எதுவும் பதிவு போடலையே ரொம்ப கேவலமாக விளையாண்டு தோத்துடோம் போல இருக்கு ன்னு நினச்சுகாதிங்க.இடைவிடாமல் தொடர்ந்து ஒரு வருடம் விளையாடியதாலும், எங்களுக்கும் குடும்பம்,குட்டி இருப்பதனாலும் கடந்த இரண்டு வாரங்களாக சொந்தகாரங்க வீட்டு நிகழ்ச்சி,அப்புறம் டீம் டூர், என இரு வாரங்களை செலவிட்டதால்,விளையாடவில்லை எனவும், வரும் வாரம் முதல் சிங்கங்கள் மீண்டும் களமிறங்க போகும் என்பது எங்கள் அணி ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு இரு வேறு கருத்து இல்லை. இனிமேல் தொடரும் எங்கள் ஆட்டம். எங்களோட இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பம். இனிமேல் பாருங்க பூகம்பம் ........!







Monday, April 26, 2010

வெட்டி வீசினோம் விளையாட்டு பசங்களை [PLAY BOYS]

ஏப் 25 ஞாயிறு: எந்த நினைப்பும் இல்லாம போய் விளையாண்டோம். வெற்றியோ தோல்வியோ அதை பத்தி பயப்படாம விளையாடுவோம்.எல்லாரும் அவங்க அவங்க திறமைய காட்டுவோம்.100 பால்ஸ் மேட்ச் பிளஸ் 100 ரூபாய் பந்தயம்.வழக்கம் போல டாஸ் தோத்துட்டோம்.இன்டர்நேஷனல் மாட்ச்ல தான் டாஸ் ஜெயிச்சா சேஸ் பன்ன்றோம்ன்னு சொல்றானுக. இங்க டாஸ் ஜெயிச்சா உடனே பாட்டிங்ன்னு சொல்லி அலையுரானுங்க.

வழக்கம் போல பௌலேர்ஸ் நல்ல ஸ்டார்ட் எடுத்து கொடுத்தாங்க.முதல் நாலு ஓவருக்கு வெறும் 12 ரன் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்துடாங்க.அப்புறம் அப்படியே நல்ல படியா எல்லாரும் விளையாண்டு அவங்கள 100 பாலுக்கு 61 ரன்க்கு கட்டுபடுத்திட்டோம். எல்லாருமே பீல்டிங் நல்ல பண்ணினோம்.சிவா,பரணி,கேப்டன் சிவா மட்டும் கொஞ்சம் சொதப்பிடானுக.அடுத்த மாட்ச்ல கரெக்ட் பண்ணிகோங்க.கீப்பர் சரவணன் இரண்டு ஸ்டம்பிங் பண்ணினாரு.சுபாஷ்,சிராஜ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

பெளலிங்கில் அசத்திய சிராஜ் மற்றும் சுபாஷ்

வழக்கத்திற்கு மாறாக சரவணன் முதல்ல பாட்டிங் பண்ணாம கேப்டன் சிவாஉடன் கிரி களமிறங்கினார்.முதலில் இறங்கிய இருவருமே சோபிக்கவில்லை.முதல் 5 ஓவருக்கு 21 ரன்க்கு 3 விக்கெட் எடுத்து தடுமாறியது.அடுத்து களமிறங்கிய சிவா மற்றும் சரவணன் 5 ஓவர்களில் 40 ரன்கள் அதிரடியாக சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சிவா 24 ரன்களுடனும், சரவணன் 11 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர்.10 ஓவர்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


வெற்றிக்கு பின் சிவா மற்றும் சரவணன் மகிழ்ச்சியை பகிர்ந்த காட்சி

MATCH SUMMARY
BATTING
SIVANESAN 24* SARAV N 11*

BOWLING
SUBASH 4-0-11-2 SIRAJ 3-0-11-2

Man of the Match : Sivanesan [For his Unbeaten 24 runs]

மே தினத்தை முன்னிட்டு நாங்கள் இன்ப சுற்றுலா செல்ல இருப்பதால் அடுத்த வாரம் மாட்ச்க்கு நாங்க லீவ். அதனால அடுத்த வாரம் விட்டு அதுக்கடுத்த வாரம் பாப்போம்.


Monday, April 19, 2010

நாறடித்து விட்டார்கள் நாஸ்தி கய்ஸ்

ஏப் 18 ஞாயிறு: போன வாரம் ஜெயட்சுடோம் அப்படிங்கற தெனவெட்லா விளையாண்டோம்.கிழிச்சு அனுப்பிட்டாங்க.100 பால்ஸ் மேட்ச் பிளஸ் 100 ரூபாய் பந்தயம்.வழக்கம் போல டாஸ் தோத்துட்டோம். முதல்ல நல்ல தான் ஆரம்பிச்சோம்.

முதல் ஏழு ஓவருக்கு வெறும் 17 ரன்களுக்கு ஒரு விக்கெட்.அவ்ளோ தான் அடிச்சாங்க.அப்புறம் என்ன நினைசாங்கல்லோ நம்ம பய புள்ளைக அடுத்த 58 பாலுக்கு 85 ரன்கள் வள்ளல் போல் வாரி வழங்கி விட்டார்கள்.ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் ராஜ்குமார் என்ற 16 வயது பொடியன் மூணு ஓவருக்கு வெறும் 11 ரன் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்தான்.கடைசியா 100 பாலுக்கு 102 ரன் எங்களுக்கு அவங்க வச்ச டார்கெட்.

எங்க bating ஒன்னும் சொல்லிகிற மாதிரி இல்ல.இரண்டு பேர் மட்டும் தான் பத்து ரன் [Siraj,Sarav N] அடிச்சோம். கடைசியா 58 ரன் அடிச்சோம் 9 விக்கெட் இழப்பிற்கு. 100 ரூபாயும் போச்சு, எங்க சபதமும் போச்சு. இனி திரும்பவும் முதல்ல இருந்து 5 மேட்ச் ஜெய்க்கனும். பாப்போம்.

Tuesday, April 13, 2010

சொல்லி அடித்து விட்டோம் கில்லி அணியை



ஏப் 11 ஞாயிறு: ஏற்கனவே இரண்டு வாரங்கள் தோல்வி, மற்றும் அணித்தலைவரின் சவால் ஆகியவற்றை மனதில் கொண்டு களமிறங்கிய HARD HITTERS அணி டாஸில் வழக்கம் போல தோற்றது. டாஸ் வென்ற கில்லி அணியினர் பேட்டிங் தேர்வு செய்தது. 100 பந்துகள் ஆட்டம் என முடிவு செய்யப்பட்டது.

சுபாஷ் பந்துவீட்சில் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் எதிரணியின் தொடக்க ஆட்டக்காரரர் ஸ்டம்புகள் சிதற கிளீன் போல்டானார்.அடுத்து அணியின் இளம்பந்துவீச்சாளர் ராஜ்குமார் மீண்டும் ஒரு முறை ஸ்டம்புகள் சிதற வைத்தார்.தொடர்ந்து பந்து வீச்சாளர்கள் அசத்த கில்லி அணி 65 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. HARD HITTERS அணி சார்பில் அதிகபட்சமாக சுபாஷ்,தியாகு,மோகன்,கிரி தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

100 பந்துக்கு 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அடுத்த இன்னிங்க்ஸ்-ஐ ஆரம்பித்த HARD HITTERS அணியினர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். முதல் விக்கெட் ஜோடி நான்கு ஓவர்களில் 30 ரன்கள் சேர்த்தது.அணியின் எண்ணிக்கை 36 ஆக இருந்த போது அணியின் தலைவர் சிவா [14 ரன்கள்] விக்கெட் பறிபோனது.பின்பு வந்த சிராஜ் உடன் ஜோடி சேர்ந்த சரவணன்[21 ரன்கள்] அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.11.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

MATCH SUMMARY
BATTING
SARAV 21 ,SIVA KUMAR 14

BOWLING
SUBASH 2-0-5-2 , GIRI 1-0-5-2

Man of the Match : Siva Kumar [For his Best Captaincy]

சவாலின் முதல் வெற்றியை பறித்து விட்டோம். இன்னும் மீதமுள்ள நான்கு ஆட்டங்களிலும் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையை இந்த ஆட்டம் எங்களுக்கு விதைத்துள்ளது.அடுத்து மோதும் NASTY GUYS எங்களை ஏற்கனவே நாற அடித்து உள்ளனர்.கட்டாயமாக பழி தீர்ப்போம் என உறுதியாக உள்ளோம் .அடுத்த வாரம் சந்திப்போம் இதை போன்றதொரு பிரம்மாண்ட வெற்றியுடன்.....!

Wednesday, April 7, 2010

எடுத்த சபதம் முடிப்போம்

கடந்த இரண்டு வாரங்களாக படு தோல்வி.முன்னணி வீரர்கள் பார்ம் அவுட், மற்றும் வீரர்களின் காயம், இது போன்ற உப்பு சப்பிலாத காரணங்களை மனதில் கொண்டு தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி வருவதால் நல்ல நிலைக்கு திரும்பிய பின் எங்களது ஆட்டம் பற்றிய பதிவு போடலாம் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு ஆட்டங்களை கவனித்த எங்கள் அணி தலைவர் எங்களை வெற்றி பாதைக்கு திருப்ப இனி தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வென்றால் அணி வீரர்கள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் ,உற்சாக பானமும் தனது சொந்த செலவில் வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக இல்லாவிட்டாலும் அதற்காவே ஜெயப்போம் என வீரகள் உறுதி கொண்டுள்ளனர்.ரசிகர்களின் பிராத்தனைகள் வீண் போகதெனவும் விரைவில் காப்டனுக்கு செலவு வைப்போம் என நெஞ்சார்ந்த உறுதி கூறுகிறோம்.அடுத்த வாரம் சந்திப்போம் வெற்றியோடு .


Chak DE Hard Hitters

Monday, March 15, 2010

HARD HITTERS ஒரு அறிமுகம்

டீம் உருவாக காரணம்
2009 பிப்ரவரி ஒரு நாள்
ஒரு மழை நாள் இரவில் வழக்கம் போல உதயாவில் //உதயா அப்படின்னா bakery .வழக்கமாவே யூத் எல்லாம் குட்டி சுவத்துல உக்காந்து இருப்பாங்கன்னு கேள்வி பட்டு இருப்பீங்க.எங்களுக்கு அந்த மாதிரி இந்த இடம்.// சின்கிள் டீக்கு காசு இல்லாம எவன மண்டைய கழுவலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப திடீர்னு ஒரு விளம்பரம் எங்க கவனத்த ஈர்த்தது. பவிளம் UTV இணைந்து நடத்தும் 10 / 10 கிரிக்கெட் போட்டி. முதல் பரிசு 1,00,000 இரண்டாம் பரிசு 50,000 . மூன்றாம் பரிசு 10,000 . நாங்க எப்பவுமே பேராசை படமாட்டோம்.அதனால எப்படியாவது அந்த மூன்றாம் பரிச வாங்கனும்ன்னு முடிவு பண்ணி எங்க விண்ணப்பம் தர்ராங்கன்னு விசாரிச்சு அந்த இடத்திற்கு குடையோட போய் எங்க டீம் க்கு ஒரு டிக்கெட் கொடுங்கன்னு கேட்டா 1000 கொடுங்கன்னு கேட்டாங்க.அப்பவே அந்த மூன்றாம் பரிசு வேணாம்.வேற எதாவது டீம்கு விட்டு கொடுத்துடலாம்னு டீ மாஸ்டர் சொன்னாரு.வயசுக்கு மரியாதையை கொடுக்காம ஆள்க்கு 100 ரூபாய் போட்டு அந்த டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டோம்.மீதி காசுக்கு கிரிக்கெட் பேட் வாங்கிட்டோம்.அப்புறம் ஏரியாக்கு வந்து அந்த டிக்கெட்ல என்ன எழுதிஇருக்குனு படிச்ச அடுத்ததா ஒரு வெடிகுண்டு. Players should be wear the uniforms while playing the match will be compelsary.அதுக்கு தான் சிவா கேட்டான் அண்ணா எங்க அம்மா என்னோட uniform எல்லாம் பாத்திரம் விற்கிறவன்கிட்ட போட்டாங்க.அப்ப என்னை விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்கலானு கேட்டு வேற கடி பண்ணிட்டான்.

அப்புறம் அதுக்கு கோவைல இருக்குற சந்து போந்து எல்லாம் அலைஞ்சு ஜெர்சி எங்க சீப்பா கிடைக்கும்னு விசாரிச்சு அங்க போய் ஆர்டர் கொடுத்துட்டோம்.உங்களுக்கும் அந்த கடையோட முகவரி வேணும்ன்னா எங்களுக்கு மெயில் பண்ணுங்க.சரி அப்புறம் ஜெர்சில எழுதுறதுக்கு டீம் பேரு வேணும்ல.மேட்ச் விளையாடுறதுக்கு கேப்டன் வேணும்ல.இந்த மாதிரி நெறைய வேனும்க்ரதுனால டீம் மீட்டிங் போட்டோம்.

டீம் [Hard Hitters] பெயர் காரணம்

இந்த மாதிரி எல்லாம் சின்ன சின்ன வேலை எல்லாம் முடிக்குறதுக்குள்ள பிப்ரவரி அவுட் ஆகி மார்ச் வந்துருச்சு.போட்டிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செஞ்சா தான நம்மளையும் விளையாட விடுவாங்க.அத எடுத்து படிச்சு பார்த்த முதல் கேள்வியே எங்கள எல்லாம் ரொம்ப யோசிக்க வைச்சுடுச்சு.பெருசா ஒன்னும் இல்ல.உங்க டீம் பேரு என்ன? அட ஆமாம் நம்ம இன்னும் பெயரே வைக்கலைன்னு ஒரு மூணு பெயரை சீட்டுல எழுதி போட்டு செலக்ட் பண்ணினோம்.ROCKING STAR தான் வந்தது.//என்ன டா Hard Hitters அப்டின்னு பேர வைச்சுக்கிட்டு வேற என்னமோன்னு சொல்றேன்னு நினைக்காதீங்க.அங்க தான் ஒரு விறுவிறுப்பான திருப்பம்.தொடர்ந்து படிங்க//.எல்லோரும் முழு மனதா அந்த பேரையே ஜெர்சில அடிக்க கொடுத்தோம்.அப்புறம் அப்படியே நாங்களும் எல்லா வாரக்கடைசிலையும் பக்கத்துக்கு ஏரியா கூட மேட்ச் கேட்டு பயிற்சி[[தோத்துட்டு]] எடுத்துட்டு இருந்தோம்.

மார்ச்ம் அவுட் ஆகி ஏப்ரல் வந்துருச்சு.மேட்ச் தேதி கொடுத்துட்டாங்க.ஏப்ரல் முதல் வாரம்.ஆனா இன்னும் ஜெர்சி வாங்கல.மாட்சுக்கு 2 நாளுக்கு முன்னாடி காசு ரெடி பண்ணி வாங்க போனா தம்பி உங்க நேம் போர்டு எல்லாம் மழைல நனைஞ்சுவிட்டது.இன்னும் 2 நாள் ஆகும்னு ஒரு பாலை தூக்கி போட்டுட்டாரு.அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப தான் ஏற்கனவே வேற ஏதோ டீம்க்கு ரெடி பண்ணி வச்சு இருந்த HARD HITTERS போர்டு இருந்தது.அப்புறம் அதையே பேர வச்சு ஜெர்சி அடிச்சுட்டோம்.[[என்ன டா பிளாஷ்பாக் ரொம்ப மொக்கையா இருக்குனு நினைக்கறது தெரியறது]] அடுத்த நாள் ஜெர்சி வாங்கி அதுக்கு அடுத்த நாள் மேட்ச் ஆடி கேவலமா தோத்தும்கறது வேற விசயம்.ஆனா இப்ப 2010 . முழுசா ஒரு வருஷம் ஆச்சு .நாங்க டென்னிஸ் பால்ல இருந்து கார்க் பாலுக்கு மாறி மாறினதொட இல்லாம ஜெயிக்க வேற ஆரம்பிச்சுட்டோம்.படிக்குற உங்களுக்கு எங்கள பத்தி எல்லாம் தெரியனும்ல அதான் கொஞ்சம் பெரிய அறிமுகம்.இனிமேல் எங்க ஒவ்வொரு மாட்ச்சும் அப்டேட் பண்ண போறோம்.பிடிச்சு இருந்தா படிங்க.பிடிக்காம இருந்தாலும் படிங்க.வேற வழி இல்ல.